மீண்டும் சர்ச்சையை கிளப்பும் ஆர்.எஸ்.எஸ்.(RSS)!அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது உறுதி…
ஆர்.எஸ்.எஸ்.(RSS) அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது அத்தனை எளிதானதல்ல என்ற போதும் அங்கு ராமர் கோவிலை கட்டியேத் தீருவோம் என்று அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் அயோத்தி தொடர்பான வழக்குகளின் விசாரணை வரும் 14ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நீதிமன்றத்திற்கு வெளியே சுமுகத்தீர்வு காணும் முயற்சியில் வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் முஸ்லீம் குழுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி விடுத்துள்ள அறிக்கையில், ராமர் கோவில் அயோத்தியில் கட்டப்படுவது உறுதி என்று தெரிவித்துள்ளார். வேறு எந்த வழிபாட்டுத் தலத்தையும் அங்கு கட்ட விட மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.