அமெரிக்கா கேப்பிடல் பிளாஸா அடுக்குமாடி குடியிருப்பு வெடிவைத்து தகர்ப்பு!
பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமெரிக்காவின் கென்டகி பகுதியில் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. ஃபிராங்க்ஃபோர்ட் (Frankfort) என்ற இடத்தில் கட்டப்பட்டிருந்த கேப்பிடல் பிளாஸா என்ற கட்டடம் பழுதடைந்து காணப்பட்டதால் அதனை இடித்து புதிய கட்டடம் கட்ட அதன் உரிமையாளர் முடிவு செய்தார்.
இதையடுத்து அந்தக் கட்டடத்தில் வெடிமருந்துகள் பொருத்தப்பட்டன. அடுத்த சில நிமிடங்களில் வெடிமருந்துகள் ஒரே நேரத்தில் வெடிக்கவைக்கப்பட்டு கேப்பிட்டல் பிளாஸா சில நொடிகளில் முழுவதுமாகச் சரிந்து விழுந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.