கொரோனா தடுப்புக்காக முகக்கவசங்கள் தைத்து கொடுத்த குடியரசு தலைவர் மனைவி.!
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மனைவி சவீதா கோவிந்த் கொரோனா தடுப்புக்காக முகக்கவசங்களை தைத்து ஆதரவற்றோர் முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு கொடுத்தனுப்பியுள்ளார்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், பலர் வீட்டிலேயே முகக்கவசம் தயாரித்து அணிந்து வருகின்றனர்.
இந்நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மனைவி சவீதா கோவிந்த் குடியரசு தலைவர் மாளிகை எஸ்டேட் பகுதியில் இருக்கும் சக்திஹாட் தையல் பயிற்சி பள்ளிக்கு சென்று, முகக்கவசங்களை தைத்து கொடுத்தார். அந்த முகக்கவசங்களை டெல்லி புறநகரில் உள்ள ஆதரவற்றோர் முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்த தகவலை டெல்லி ஷெல்டர்ஸ் மேம்பாட்டு வாரியம் கூறியுள்ளது.