50 ஆயிரம் விவசாயிகள் மும்பையில் இன்று பிரம்மாண்டப் பேரணி!
50 ஆயிரம் விவசாயிகளின் பிரம்மாண்டமான பேரணி நாசிக்கில் இருந்து புறப்பட்டு மும்பையை அடைந்துள்ளது.
இன்று மகாராஷ்ட்ரா சட்டப்பேரவை வளாகம் முன்பு பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். விவசாயிகள் பேரணி காரணமாக மும்பை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
சரக்கு வாகனங்கள் மும்பைக்குள் நுழைய இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாய கடன்களை முழுவதும் ரத்து செய்ய வேண்டும், நிவாரணம் அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி விவசாய சங்கங்கள் ஓரணியில் திரண்டு பேரணியாக மும்பைக்கு படையெடுத்துள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.