ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்கு ஆவின் பாலை விற்றால் கடுமையான நடவடிக்கை : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்கு ஆவின் பாலை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பால் வள துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸை முயற்சியில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிற நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகள் மட்டும், சில கட்டுப்பாடுகளுடன், குறிப்பிட்ட நேரம் திறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கை பயன்படுத்தி, ஆவின் பால் அதிக விலைக்கு விற்கப்படுவதாக நிலையில், விருதுநகரில் செய்தியாளர் சந்திப்பின் போது இதுகுறித்து பேசிய பால் வள துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள், இதுவரை எந்த இடத்திலும் இப்படி நடந்ததாக தெரியவில்லை. அப்படி தெரிய வரும் பட்சத்தில், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழக அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.