அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 27-ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் முதலில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன் பின்னர் தான் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.ஆனால் ஊரடங்கு நீட்டித்தாலும் ஒரு சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தினமும் இருந்து வருகிறது.
இந்நிலையில் வருகின்ற 27-ஆம் தேதி பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பரன்சில் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.