இன்றைய நாள் (23.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்.? இதோ உங்களுக்கான ராசி பலன்கள் !

Default Image

உங்களுக்கான ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று தன்னம்பிக்கை குறைந்து காணப்படும் நாள். உற்சாகத்தை அதிகப்படுத்திக்கொண்டால் இன்றைய நாள் உங்களுக்கானதாக அமையும்.

ரிஷபம் : இன்று உங்களிடம் உற்சாகம் குறைந்து காணப்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுத்தி கொள்ளுங்கள். உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள்.

மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கானது. கடினமான உழைப்பின் மூலம் இலட்சியத்தை அடைய முடியும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.

கடகம் : இன்று உங்களுக்கு சாதகமான நல்ல பலன்கள் கிடைக்கும். இலட்சியங்களை அமைத்து கொண்டு திட்டமிடுவது நல்ல பலன்களை தரும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.

சிம்மம் : உங்கள் பொறுமையை சோதிக்கும் நாளாக இன்று இருக்கும். உணர்ச்சிகளை கட்டுப்பாடுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். பிரார்த்தனைகள் கைகொடுக்கும்.

கன்னி : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. அனுசரித்து நடந்துகொண்டால் மகிழ்ச்சி கிடைக்கும். காலதாமதம் கவலையளிக்கும்.

துலாம் : இன்று சமமான நாளாக இருக்கும். நட்பு வட்டாரத்தின் ஆதரவு கிடைக்கும். நட்பு வட்டாரம் பெரிதாக வாய்ப்புள்ளது. பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தும்.

விருச்சிகம் : திருப்தி தரும் புது புது வாய்ப்புகள் கிடைக்கபெரும் நாள். உங்கள் லட்சியத்தை அடைய முயற்சி செய்ய வேண்டிய நாள். பிரார்த்தனை செய்வது மிக நல்லது.

தனுசு : குடும்ப பிரச்சனைகள் மனதில் கவலைகளை உண்டாக்கும். கவலைகளை மறந்துவிடுங்கள். எதனையும் எளிதாக எடுத்து கொள்ளுங்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டும்.

மகரம் : சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் சூழல் உருவாகும். பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. சோர்வாக காணப்படுவீர்கள். யோகா செய்யுங்கள் தெளிவு உருவாகும்.

கும்பம் : முக்கியமான முடிவுகளை எடுக்க இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இன்று அமைதியை கடைபிடியுங்கள்.

மீனம் : இன்று மனச்சோர்வு இருக்கும். யதார்த்தமாக செயல்பட வேண்டும். ஏமாற்றங்களை சமாளிக்க தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்