முகக்கவசம் தயாரிக்கும் பிரபல நடிகை !
நடிகை வித்யா பாலன் வீட்டிலேயே புடவை துணி மூலம் முக கவசம் செய்வது எப்படி என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டிருந்தாலும், நாளுக்கு நாள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இதனையடுத்து, மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும் போது, முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், நடிகை வித்யா பாலன் வீட்டிலேயே புடவை துணி மூலம் முக கவசம் செய்வது எப்படி என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.