ட்வீட்டரில் ட்ரெண்டாகும் '#அஜித்தை பின்தொடரும் விஜய்' ஹேஸ்டேக்!

Default Image

விஜய் குறித்து, அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் #அஜித்தை பின்தொடரும் விஜய் என்ற ஹேஸ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கொரோன நிவாரண நிதிக்காக பிரபலங்கள் பலரும் உதவி செய்து வருகிற நிலையில், நடிகர் விஜய் ரூ.1.30கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். அதன்படி, பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், தமிழக முதல்வர் நிவரண நிதிக்கு ரூ.50 லட்சமும், கேரளாவுக்கு ரூ.10 லட்சமும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரிக்கு தலா ரூ.5 லட்சம்  நிதி வழங்கப்படும் என்றும், மேலும் ஃபெப்சிக்கு நடிகர் விஜய் ரூ.25 லட்சமும், திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இவரை பாராட்டும் வகையில் விஐய் ரசிகர்கள், ட்வீட்டரில் #RealHeroThalapathyVIJAY, #Master போன்ற ஹாஸ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வந்தனர். இதனையடுத்து, அஜித் ரசிகர்கள், ட்வீட்டரில், #அஜித்தைபின்தொடரும்விஜய் என்ற ஹாஸ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்