மருத்துவர்கள், செவிலியர்கள் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிவாரணம் – முதல்வர்

Default Image

மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் ஏற்கனவே ரூ.10 லட்சம் அறிவித்திருந்த நிலையில், தற்போது ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் உயிரிழக்க நேரிட்டால் ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணியின்போது தொற்று ஏற்பட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், உள்ளாட்சித்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் இறக்க நேரிட்டால் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே ரூ.10 லட்சம் நிவாரண தொகை அறிவித்திருந்த நிலையில், தற்போது நிவாரண தொகை ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டு இறப்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் சிறப்பான முறையில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு தகுந்த விருதுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்