ஏப்ரல் 26, மே 3-ல் சென்னை மாநகராட்சி முழுவதும் முழு அடைப்பு அவசியம்! ஜி.கே.வாசன் வேண்டுகோள்!
ஏப்ரல் 26, மே 3-ல் சென்னை மாநகராட்சி முழுவதும் முழு அடைப்பு அவசியம் என ஜி.கே.வாசன் வேண்டுகோள்.
கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், மக்கள் கூடும் அனைத்து கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனையடுத்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், சென்னை மாநகராட்சி முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளான ஏப்ரல் 26, மே 3-ல் முழு அடைப்பு அவசியம் என தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவமனை, மருந்துகங்களை தவிர பிற கடைகள் மூடப்பட வேண்டும் எனவும், கொரோனாவை கட்டுப்படுத்த 2 நாட்களிலும் முழு ஊரடங்கு பற்றி மாநகராட்சி, தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.