கொரோனா குறித்து விசாரிக்க சீனாவுக்கு நிபுணர்களை அனுப்ப விருப்பம்- அமெரிக்க அதிபர் டிரம்ப்
சீனாவுக்கு அமெரிக்க நிபுணர்கள் குழுவை அனுப்ப முடிவு செய்துளேன் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
உலக முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ்.முதலில் சீனாவில் உள்ள உகான் மாகாணத்தில் தான் கொரோனா வைரஸ் பரவியது.இதன் பின்னர் தான் உலக நாடுகளை இந்த வைரஸ் தாக்கி வருகிறது.ஆனால் கொரோனா வைரசை சீனா தான் உருவாக்கியுள்ளது என்று அமெரிக்கா சந்தேகப்பட்டு வருகிறது. உஹான் மருத்துவ ஆய்வகத்தின் வைரஸ் தொடர்பான பரிசோதனையின் போது கொரோனா வெளிப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா சந்தேகப்படுவதாகவும், அதனை உறுதிபட தெரிவிக்க ஆதாரங்கள் ஏதும் இல்லையென்றும் கூறப்படுகிறது.
இதன் விளைவாகத்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸை சீனா வைரஸ் என்று கூறி வந்தார்.இதற்கு சீனா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.இந்த சமயத்திலும் இரு நாடுகளிடையே பனிப்போர் அதிகரித்து தான் வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில்,கொரோனா வைரஸ் சீனாவில் எப்படி பரவியது உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்த சீனாவுக்கு அமெரிக்க நிபுணர்கள் குழுவை அனுப்ப முடிவு செய்துளேன்.இதற்காக சீனாவிடம் நாங்கள் அனுமதி கோரினோம்.ஆனால் அவர்கள் பதில் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.