கொரோனா நிவாரணத்திற்காக நடத்தப்பட்ட இணைய வழி இசைக் கச்சேரி! எத்தனை கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது தெரியுமா?
கொரோனா நிவாரணத்திற்காக நடத்தப்பட்ட இணைய வழி இசைக் கச்சேரியில் 980 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கொரோன தடுப்பு பணிக்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா நிவாரண நிதிக்காக, பிரபல பாப் பாடகியான லேடி ககாவும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து, இணையவழி இசைக்கச்சேரியை நடத்தியுள்ளனர். இந்த கச்சேரி ONE WORLD, TOGETHER AT HOME என பெயரிடப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில், ஸ்டிவி வெண்டர், பால் மெக்கார்ட்னி, எல்டன் ஜான் போன்ற பிரபலங்கள் வீட்டிலிருந்தபடியே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இடையே கொரோனா குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. லட்சக்கணக்கானோர் ரசித்த இந்த நிகழ்ச்சியின் மூலம் சுமார், கொரோனா நிவாரண நிதியாக 980 கோடி ரூபாய் திரட்டப்பட்டது.