கொல்லும் கொரோனா கூட சாதி,மதம் பார்ப்பதில்லை – இவ்வாறு செய்வது அரக்க குணம்!
நாடு முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ்க்கு எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மருத்துவர்கள் தான் உலகத்தை காப்பதற்காக தற்போது எதிர்ப்பு மருந்துகளாக பயன் படுகிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது.
இந்நிலையில், அண்மையில் சென்னை வேலங்காடு பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை செய்து நேற்று முன்தினம் இறந்து போனார் மருத்துவர் சைமன். அவரது உடலை வேலங்காடு சுடுகாட்டில் அடக்கம் செய்ய அந்த ஊர் மக்கள் தடுத்தனர். காரணம் கேட்டதற்கு அவர் சடலத்திலிருந்து கொரோனா பரவி விடும் என்ற அச்சம் தெரிவித்தனர்.
இந்நிலையில், “கொல்லும் கொரோனா கூட சாதி,மதம் பார்ப்பதில்லை. ஆனால் நாமோ,நம்மை காக்க போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து,இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம். பாதுகாப்புக்கருவிகள் இல்லாமல்கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள்” என நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு
கொல்லும் கொரோனா கூட சாதி,மதம் பார்ப்பதில்லை. ஆனால் நாமோ,நம்மை காக்க போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து,இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம். பாதுகாப்புக்கருவிகள் இல்லாமல்கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) April 20, 2020