#BREAKING: தவறான முடிவை காட்டியதால் ரேபிட் டெஸ்ட் பரிசோதனை நிறுத்தம்.!
ராஜஸ்தானில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவை காட்டியதால் பரிசோதனை செய்யும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா வைரஸால் 1576 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ராஜஸ்தான் ஒன்றாகும், இதுவரை 25 பேர் இறந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் 10,000 விரைவான சோதனைக் கருவிகள் உள்ளன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (இன்று) விரைவான சோதனைக் கருவிகள் மூலம் பரிசோதனை செய்யும் போது தவறான முடிவை காட்டியதால் பரிசோதனை செய்யும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.