10 ஆம் வகுப்பு தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் – அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு தேர்வுக்கு இடையிலும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும். தேர்வு எப்போது நடத்தப்படும் என மே 3 ஆம் தேதிக்கு பிறகு முடிவு எடுக்கப்பட்டு, தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார். இதனிடையே ஊரடங்கு நீட்டிப்பால், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனியார் பள்ளிகளை பொறுத்தவரை கட்டாய வசூல் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீட் தேர்வை பொறுத்தவரை மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் தமிழகத்திலும் அதற்கான நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர் மாணவர்களுக்கு யூடியூப், பொதிகை சேனல் மூலமாக பாடம் கற்றுக்கொள்ள வழி செய்யப்படும் என்றும் ஒருநாள் விட்டு ஒருநாள் தேர்வு எப்படி எழுதலாம் என்பது குறித்து முதல்வரிடம் ஒப்புதல் பெற்று, அந்தப் பணிகளை நிறைவேற்றுவோம் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.