வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் சலுகை அளித்த பிஎஸ்என்எல்.!

மே 5ஆம் தேதி வரையில் பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு இன்கமிங் கால் இலவசமாக வந்துவிடும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அத்யாவசிய கடைகள் தவிர மற்ற ரீசார்ஜ் கடைகள் எதுவும் இல்லாததால் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்புகளை தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே தனது வாடிக்கையாளர்களுக்கு ஊரடங்கு முடியும் வரையில் இன்கமிங் கால் வேலிடிட்டி இலவசம் என பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தற்போது அந்த வேலிடிட்டி காலத்தை மே 5ஆம் தேதி வரையில் நீடித்துள்ளது. அதுவரையில் பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு இன்கமிங் கால் எந்தவித கட்டணமின்றி இலவசமாக வந்துவிடும் என பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025