சளி, காய்ச்சல் அறிகுறி இல்லாமலேயே கொரோனா.! – ஐசிஎம்ஆர் திடுக்கிடும் தகவல்.!
நாடு முழுவதும் 17 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 80% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 80% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research) திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது. கொரோனவால் நாடு முழுவதும் இதுவரை 17,265 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 543 பேர் பலியாகியுள்ளனர். மேலும் வைரஸிலிருந்து 2,547 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காய்ச்சல், சளி, இருமல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் இந்தியாவில் 80% பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இதனிடையே டெல்லியில் 186 பேருக்கு கொரோனா அறிகுறி இல்லாமலேயே கொரோனா தொற்று இருப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.