மக்களை மீது கிருமிநாசினி தெளிப்பது கூடாது-மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
மக்களை நிற்க வைத்து கிருமிநாசினி தெளிப்பது கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது.எனவே இதனை தடுக்க ஒரு சில இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு நடைபாதை அமைக்கப்பட்டது.இதன் பின்னர் தமிழக சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அந்த அறிக்கையில், மனிதர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பது பயனற்றது என்பதோடு தீங்கும் விளைவிக்கும். இனி எந்த இடத்திலும் கிருமிநாசினி சுரங்கம் அமைக்கவும் அதனை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டதாக தெரிவித்தது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது, தனி நபர் மீதோ அல்லது கூட்டமாக மக்களை நிற்க வைத்தோ கிருமிநாசினி தெளிப்பது கூடாது. மக்கள் மீது கிருமி நாசினி தெளிக்கும் போது, உடலின் உள் உறுப்புகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.