உணவுப்பொருள் அவசரம் ! ஸ்டிக்கர் ஒட்டி ஏமாற்றிய லாரிகள் பறிமுதல்
உணவுப்பொருள் அவசரம் என்று ஸ்டிக்கர் ஒட்டி சிமென்ட் ஏற்றி சென்ற 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை செம்பியம் நெடுஞ்சாலை அருகே லாரி ஓன்று சென்றுகொண்டிருந்தது.அப்பொழுது அந்த வழியாக வந்த அதிகாரிகள் அந்த லாரியில் உள்ள கண்ணாடியில் உணவுப்பொருள் அவசரம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் லாரியை பின்தொடர்ந்து சென்றனர்.பின்னர் அந்த லாரி குடோனுக்குள் சென்றது.
அங்கு அந்த லாரியை சோதனை செய்தனர் அதிகாரிகள்.அந்த லாரியில் சிமென்ட் மூட்டைகள் இருந்தது. அதே இடத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு 3 லாரிகள் நின்றது.3 லாரிகளிலும் சிமெண்ட் இருந்த நிலையில் அதிகாரிகள் அதனை புழல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதன் பின்னர் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.