கோவாவில் குரங்குக் காய்ச்சல் பீதி!தொடரும் பாதிப்பு…

குரங்குக் காய்ச்சல் பாதிப்பு  கோவாவில் 35 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

1957-ம் ஆண்டு கர்நாடகாவின் கியாசனூர் வனப்பகுதியில் ஏற்பட்ட காய்ச்சல் என்பதால், இது கியாசனூர் வனக் காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. குரங்குகளிடமிருந்து பரவும் உண்ணி மனிதர்களைக் கடிப்பதன் மூலம், குரங்குக் காய்ச்சல் ஏற்படுகிறது. ஏற்கெனவே சிறுநீரகம், இதயம், கல்லீரல் உள்ளிட்ட கோளாறு உள்ளவர்களுக்கு விரைவில் இந்த நோய் தாக்கக் கூடிய அபாயம் உள்ளது. இந்த நோயால் பாதிக்கும் மனிதர்களை விட குரங்குகளே அதிகம் உயிரிழப்பதாகவும், அதன் இறந்த உடல் உள்ள 50 மீட்டர் சுற்றளவுக்குள் இந்த நோய் தாக்கக் கூடிய அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கோவாவின் சட்டாரி தாலுகாவில் டெங்கு போன்ற அதீத காய்ச்சல், உடல்வலி அறிகுறியோடு இருந்த 35 பேருக்கு குரங்குக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உண்ணி பாதிப்புக்கு எதிரான தடுப்பூசி சம்பந்தப்பட்ட கிராமங்களில் கோவா சுகாதாரத்துறை சார்பில் போடப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment