ரேபிட் கிட் கருவிகளை ஏற்றிவர சீனாவிற்கு சென்றது இந்திய விமானம்.!
சீனாவில் தயாரான ரேபிட் கிட் கருவிகளை இந்தியா கொண்டுவர ஏர் இந்தியா விமானம் தற்போது சீனாவிற்கு புறப்பட்டது.
கொரோனா தொற்றை அரை மணிநேரத்தில் விரைவாக கண்டறியும் ரேபிட் ஆன்டிபாடி கிட் பரிசோதனை கருவிகளை இந்திய அரசு சீனாவிடம் ஆர்டர் செய்திருந்தது. அதன் படி முதற்கட்டமாக 3 லட்சம் கிட்கள் பரிசோதனை செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டன.
தற்போது மேலும், ரேபிட் கிட் பரிசோதனை கருவிகளை இந்தியாவிற்கு கொண்டுவர ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் சீனாவிற்கு புறப்பட்டது. இந்த விமானம் மூலம் ரேபிட் கிட் கருவிகள், மருத்துவ உபகரணங்களை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட உள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் இந்த விமானம் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.