ஆந்திர முதல்வருக்கு ரேபிட் கிட் மூலம் கொரோனா பரிசோதனை.!
ரேபிட் கிட் கருவி மூலம் ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு கொரோனா இல்லை என முடிவு வெளியானது.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை மக்களிடம் விரைவாக கண்டறிய வெளிநாடுகளில் இருந்து ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் கிட்களை ஆர்டர் செய்திருந்தது. இதுவரை 3 லட்சம் ரேபிட் கிட்கள் சீனாவில் இருந்து இந்தியா வந்துள்ளன.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் இதுவரை 572 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 14 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு விரைவாக பரிசோதனை செய்வதற்காக தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் ரேபிட் கிட் கருவிகள் ஆந்திர மாநிலத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
அதன் படி, வந்திறங்கிய ரேபிட் கிட் கருவி மூலம் ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா துரித பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு கொரோனா இல்லை என முடிவு வெளியானது.