ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி திரிபுராவில் லெனின் சிலையைத் தகர்த்திருப்பதை கண்டித்து போராட்டம் !
திரிபுராவில் ஆர்எஸ்எஸ்/பாஜக வெறியர்கள் தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து லெனின் சிலையைத் தகர்த்திருப்பதை ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது.
அதேபோன்று திரிபுராவில் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் தாக்கப்பட்டிருப்பதை கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது.
கடந்த மார்ச் 6ஆம் தேதி திரிபுராவில் இருந்த லெனின் சிலையை, பாஜகவினர் அகற்றினர்.
தேர்தல் முடிவு வெளியான 2 நாட்களுக்குள் பாஜகவினர் செய்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
பாஜகவினர், பெலோனியா நகரில் இருந்த லெனின் சிலையை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இருந்த லெனின் சிலையை அகற்றும்போது பாரத் மாதா கி ஜெய் என்று பாஜகவினர் கோஷமிட்டனர்.
சிலையை அகற்றியதை பார்த்து இடதுசாரிகள் கோபம் அடைந்தனர்.பாஜகவுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிலையை நாங்கள் அகற்றவில்லை என்றும் இடதுசாரிகளால் அடக்கி வைக்கப்பட்ட மக்கள் கோபத்துடன் அகற்றினர் என்று பாஜக தெரிவித்துள்ளது.
லெனின் சிலையை அகற்றி அதன் தலையை துண்டித்து கால்பந்து போன்று பயன்படுத்தி பாஜகவினர் கால்பந்தாட்டம் விளையாடினார்கள் என்று சிபிஎம் நிர்வாகி தபஸ் தத்தா தெரிவித்திருந்தார்.
அத்துடன் ஜேசிபி இயந்திரத்தின் டிரைவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ரூ. 3 லட்சத்தில் அமைக்கப்பட்ட லெனின் சிலை திரிபுராவில் கடந்த 2013ம் ஆண்டு நிறுவப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.