திருவள்ளூரில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்.!

Default Image

தமிழகத்தில் இன்று மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 1,267 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.ஆனாலும் அத்தியாவசிய பொருள்கள் வாங்க பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணியவேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.இந்த வழிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிப்பது இல்லை என பலர் புகார்கள் எழுந்தநிலையில் சில மாவட்டங்களில் அதிரடி அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூரில் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே சென்றால் ரூ.200 அபராதம் என ஆட்சியர் மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.இதற்கு முன் சென்னையில் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியேநடந்து வந்தால் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்