ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிவோருக்கு ஊதிய உயர்வு -தமிழக அரசு அரசாணை
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிவோருக்கான ஊதியத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஷின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மே 3-ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மேலும் வருகின்ற 20-ஆம் தேதி வரை ஒரு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால் பணியாளர்கள் முக கவசம் அணிந்து, சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிவோருக்கான ஊதியத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.ரூ. 229 ஆக இருந்ததை ரூ.256 ஆக உயர்த்த மத்திய அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.