இன்றைய நாள் (18.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்…. இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

Default Image

இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்களுக்கு சாதகமான நாள். இன்று தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.

ரிஷபம் : மகிழ்ச்சி கிடைக்கும் நாள். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உங்கள் செயலில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் காணப்படும்.

மிதுனம் : இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். உங்கள் இலட்சியத்தை அடைவதில் தாமதம் ஏற்படும். நன்கு யோசித்து முடிவெடுங்கள் அது நன்மையில் முடியும்.

கடகம் : இன்று உங்கள் புத்திசாலித்தனத்தை உபயோகபடுத்தி சவால்களை திறம்பட கையாள வேண்டும். மனஉறுதியுடன் போரட்டங்களை எதிர்கொள்ளலாம். இன்று உற்சாகமாக இருங்கள்.

சிம்மம் : உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் உற்சாகமான மனநிலை காரணமாக இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிட்டும். உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும். அனைத்து விதத்திலும் செழிப்பான நாள்.

கன்னி : இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். இன்று உங்களுக்கு சாதகமான நாள். அதற்கான சிறந்த சூழ்நிலை காணப்படும். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

துலாம் : இன்று உங்களுக்கான நாள். முன்னேற்றத்திற்கான முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். இன்று சிறப்பான நாள்.

விருச்சிகம் : இன்றைய நாள் கட்டுப்பாட்டில் இருக்காது. இன்றைய சவால்களை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.

தனுசு : இன்று நன்மை உண்டாகும் நாள். திருப்திகாரமான நாள். உங்கள் முயற்சியில் வெற்றி கிட்டும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

மகரம் : தேவையில்லாத மன குழப்பமும், பதட்டமும் உண்டாகும்.  பொறுமையை கையாண்டால் இந்த சூழ்நிலையை சமாளிக்கலாம்

கும்பம் : இன்று நேர்மறையான எண்ணங்களை சிந்திக்க வேண்டும். அது உங்களுக்கு உற்சாகத்தையும், மன நிம்மதியையும் தரும். திறமைகளை வெளிக்கொணர வேண்டும்.

மீனம் : உங்கள் பாதையில் தடைகள் ஏற்படும். அந்த சவால்களை மன உறுதியுடன் எதிர்கொண்டால் வெற்றி கிட்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்