#Breaking: தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா.!

Default Image

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 1,267 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தஞ்சாவூரில் 17 பேருக்கும், சென்னையில் 11 பேருக்கும் இன்று மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர்களில் 283 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்றும் இன்று ஒரே நாளில் 103 பேர் குணமடைந்துள்ளார்கள் என கூறியுள்ளனர். இதனிடையே இதுவரை 15 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து 78,349 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இதையடுத்து 23,934 பேர் வீட்டு கண்காணிப்பில் இருக்கின்றார்கள் என்றும் 34 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளனர் என கூறியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 29,673 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1,323 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தற்போது 1040 பேர் கொரோனா சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்