பாகிஸ்தான் மருத்துவருக்கு வித்தியாசமாக நன்றி தெரிவித்த அமெரிக்கர்கள்.! எதற்காக?!
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது அமெரிக்கா நாடு. இங்கு இதுவரை 6.74 34,641 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அந்நாட்டில் போதிய வென்டிலேட்டர்கள் இல்லாததும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
இதற்காக அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மருத்துவர் சவுத் அன்வர் ஒரு புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தினார். அந்த கருவி மூலம் ஒரே நேரத்தில் ஒரு வென்டிலேட்டரை வைத்து 7 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும். இதன் மூலம் 7 பேருக்கு செயற்கை சுவாசம் அளித்து அவர்கள் உயிரை காப்பாற்ற முடியும்.
இந்த கருவி தற்போது அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகி வருகிறது. இதனால் மருத்துவர் சவுத் அன்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவர் வசிக்கும் சவுத் விண்ட்சரில் அமெரிக்க மக்கள் தங்களது காரில் வரிசையாக வந்து அவரது வீட்டருகே வந்து நன்றி தெரிவிக்கும் போர்டுகளை காட்டி நன்றி தெரிவித்தனர். மருத்துவர் சவுத் அன்வரும் தனது வீட்டில் இருந்தபடியே கையசைத்து தனது சந்தோசத்தை வெளிப்படுத்தினர்.