167 ஆண்டுகளில் முதல் முறையாக இயங்காத ரயில்கள்.!
இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் கடந்த 1856-ம் ஆண்டு ஏப் 16-ம் தேதி இயக்கபட்டது. மும்பை போரிபந்தரில் இருந்து தானேவுக்கு கிரேட் இந்தியன் பெனின சுலா ரயில்வே கோட்டத்தின் கீழ் முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.
இதையெடுத்து போரிப்பந்தரின் பெயர் விக்டோரியா டெர்மினஸ் என்றும், பின்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம் என்று பெயர்கள் மாற்றப்பட்டன. கிரேட் இந்தியன் பெனின்சுலா ரயில்வே பின்னர் மத்திய ரயில்வே ஆக பெயர் மாற்றப்பட்டது.
இந்நிலையில் முதல் பயணிகள் ரயில் இயக்கிய தினமாக நேற்று இந்தியாவில் ரயில்கள் ஓடாதது இதுவே முதல்முறையாகும். கடந்த 167 ஆண்டுகளில் இதுபோன்ற சம்பவம் நடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.