ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு ஏழைகளுக்கு உதவியாக இருக்கும் – பிரதமர் மோடி ட்வீட்.!

Default Image

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் பணப்புழக்கத்தை அதிகரித்து, கடன் வழங்குவதை அதிகரிக்கும் பிரதமர் மோடி ட்வீட்.

கொரோனா மற்றும் ஊரடங்கு உத்தரவால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்கை பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரம் கடும் சரிவை கண்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கடந்த 27-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு சலுகைகளை அறிவித்தார். இதையடுத்து இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து சில சலுகைகளை அறிவித்தார். அப்போது, ரிவர்ஸ் ரெப்போ வட்டிவிகிதம் 4 லிருந்து 3.75 ஆக குறைத்து, மக்களிடம்ப பணம் புழக்கத்துக்காக வட்டி விகிதம் 0.25 % ஆக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அவசர தேவைக்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து 60% வரை கூடுதலாக மாநில அரசுகள் கடன் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்வதற்காக மாநில அரசுகள் கூடுதலாக கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார். இதையடுத்து சிறு, குறு தொழில் துறையினருக்கு கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில் பணம் கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் பணப்புழக்கத்தை அதிகரித்து, கடன் வழங்குவதை அதிகரிக்கும். இந்த நடவடிக்கைகள் சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கும். இது (WMA) வரம்புகளை அதிகரிப்பதன் மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் உதவும் என்றும் பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live , Cyclone Fengal
LIVE NEWS TAMIL
Udhayanidhi Stalin
gold price
Cyclone Felgam
Droupadi Murmu
US President - Israel Hezbolla war
Exams Postpond