உலகளவில் கொரோனாவால் பலியானவர்கள் 1.41 லட்சமாக உயர்வு!
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. ஒவ்வொரு நாடுகளிலும் அரசு அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், பல நாடுகளில் இதன் தாக்கம் கூடிக்கொண்டே செல்கிறது. இதுவரை உலக அளவில் 2,182,823 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை இந்த வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 145,551 ஆக அதிகரித்துள்ளது.
நமக்கு என்ன வந்துவிடவா போகிறது, நம் அருகில் உள்ளவர்களுக்கு இல்லை தானே என்று இனியும் மக்கள் அலட்சியமாக இருக்காமல் ஒவ்வொருவரும் தனிமனித இடைவெளியை பின்பற்றி, சமூக பரவலை தடுப்பதற்கு அரசுடன் ஒத்துழைத்து உதவினால் நிச்சயமாக இந்த வைரஸில் இருந்து விடுபட முடியும்.