Zoom செயலி பாதுகாப்பானது இல்லை-எச்சரிக்கை விடுத்த மத்திய உள்துறை அமைச்சகம்

Default Image

Zoom செயலி பாதுகாப்பானது இல்லை என்று  மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்விளைவாக வீட்டில் இருந்தபடியே பணியாற்றும் ஐடி துறையை சார்ந்தவர்கள் வீடியோ கான்ப்ரன்ஸ் கான்பரன்சிங் மூலமாக கூட்டங்கள் நடத்த உதவுவது Zoom App என்ற செயலி .கடந்த 10 நாட்களுக்கு மேலாக இந்த செயலியின் பயன்பாடு அதிகரித்துள்ளது.வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கூட்டம் நடத்துவது , தனிப்பட்ட செய்திகள் அனுப்புவது உள்ளிட்ட வசதிகள் உள்ளது. மேலும் இந்த செயலியில் புதிதாக கணக்கு தொடங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.இதனை அரசு ஊழியர்களும் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குஇடையில்தான்  Zoom செயலியின் 5 லட்சத்திற்கு மேற்பட்ட கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு dark web-ல் விற்பனை செய்யப்படுவதாக  தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில்,Zoom செயலி பாதுகாப்பானது அல்ல .எனவே இதனை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த செயலியை கூகுள்,டெஸ்லா,நாசா சில கல்வி நிறுவனங்கள் இந்த செயலியை பயன்படுத்த தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 17042025
Dhankar
TVK Booth Committee
Madurai Temple Festival
amit shah edappadi palanisamy selvaperunthagai
sanju samson injury
santhanam and str