சமையல் கேஸ் தேவை 40 சதவீதம் அதிகரிப்பு !
இந்தியா முழுவதும் கடந்த 14-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருந்தநிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக மேலும் 19 நாள்கள் அதாவது மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் தொழிற்சாலைகள், வாகன போக்குவரத்து என எல்லாம் முடக்கியதால் பெட்ரோல் விலையும் டீசல் தேவை 70 சதவீதம் சரிந்தது.
அதே நேரத்தில் சமையில் கேஸ் தேவை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இந்த மாதம் முதல் வாரத்தில் மட்டும் சமையல் கேஸ் தேவை முந்திய ஆண்டு ஏப்ரலுடன் ஒப்பிடும்போது 40 சதவீதம் அதிகரித்துள்ளது என எண்ணெய் நிறுவங்கள் தெரிவித்துள்ளன.
ஏப்ரல் ,மே மற்றும் ஜூன் மாதத்தில் சப்ளை செய்வதற்காக இந்த மாத துவக்கத்தில் மேற்கொண்ட எண்ணெய் நிறுவங்கள் 7,37,000 டன் சமையல் எரிவாயு வாங்க டெண்டர் வெளிட்டுள்ளன. இதனால் சமையல் எரிவாயு விலை சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது.வீடுகளில் சமையல் அதிகரித்த காரணமாக பயன்பாடுகள் உயர்ந்துள்ளது.