இந்தியாவில் 325 மாவட்டங்களில் கொரோனா இல்லை – மத்திய சுகாதார அமைச்சகம்

இந்தியாவில் 325 மாவட்டங்களில் கொரோனா வைரஸ்  இல்லை என்று  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.இதன்விளைவாக மத்திய அரசு முதலில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.இதன் பின்னர் மே 3-ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.மேலும் 20-ஆம் தேதிக்கு பிறகு ஒரு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது,இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 941 பேருக்கு  கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது . கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,183 பேர் குணமடைந்தாகவும் தெரிவித்துள்ளது.மேலும் இந்தியாவில் 325 மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லை என்றும் தெரிவித்துள்ளது.