3 லட்சம் ரேபிட் பரிசோதனை கிட்கள் இந்தியா வந்துள்ளன : ஐசிஎம்ஆர் தகவல்.!
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்தொற்று இதுவரை இந்தியாவில் 12,380 பேரை பாதித்துள்ளது. 414 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவை விரைவாக கண்டறியும் ரேபிட் ஆன்டிபாடி கிட்களை சீனாவிடம் இருந்து ஆர்டர் செய்திருந்தது.
கொரோனா வைரஸை விரைவாக கண்டறிய சீனாவிடம் 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை இந்தியா ஆர்டர் செய்திருந்தது. தற்போது முதற்கட்டமாக 3 லட்சம் ரேபிட் கிட்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியா வந்துள்ள 3 லட்சம் ரேபிட் கிட்கள் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட ஹாட் ஸ்பாட் பகுதிகளுக்கு முதலில் அனுப்பி வைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே 170 மாவட்டங்களை ஹாட் ஸ்பாட் மையங்களாக அரசு அறிவித்திருந்தது. அந்த மாவட்டங்களுக்கு முதலில் ரேபிட் கிட் அனுப்பிவைக்கப்பட உள்ளன.