காவிரி விவகாரத்தில் தீபக் மிஸ்ரா பிரதமர் மோடி வழிகாட்டலில், செயல்படுகிறாரா?
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காவிரி வழக்கில் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தமிழகத்தின் தலையில் கல்லைப் போட்டுவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி வழக்கில் தமிழக அரசு சரியாக வாதிடவில்லை என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாகவும் குற்றஞ்சாட்டினார். ராஜீவ் கொலை விவகாரத்தில் ராகுல்காந்தியின் கருத்து ஆறுதல் தருவதாகவும், புண்பட்ட உள்ளங்களுக்கு மருந்திடுவது போன்றது என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.