பீட்சா டெலிவரி செய்த நபருக்கு கொரோனா..72 குடும்பங்கள் தனிமை.!

Default Image

டெல்லியில் பீட்சா டெலிவரி செய்யும் நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தெற்கு டெல்லியில் மால்வியா நகர் பகுதியில் உள்ள 19 வயதான பீட்சா டெலிவரி நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதாக அம்மாவட்ட ஆட்சியர் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக அவருடன் பணிபுரியும் 16 நபர்களை கடையில் தனிமைப்படுத்த முடிவு செய்தனர். மேலும் கடையின் மூலம் உணவு வழங்கப்பட்ட ஒவ்வொரு வீட்டையும் அடையாளம் காணும் பணி தற்போது நடந்து வருகிறது.
அந்த வகையில் பீட்சா டெலிவரி செய்யப்பட்ட 72 குடும்பங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும், சுய தனிமைப்படுத்தப்பட்டன. அந்த பீட்சா நபர் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை பணியில் இருந்து பீட்சாக்களை வீடுகளுக்கு வழங்கியுள்ளார். பின்னர் கடந்த 15 நாட்களில் அந்த நபர் தெற்கு டெல்லி பகுதிகளான ஹவுஸ் காஸ், மால்வியா நகர் மற்றும் சாவித்ரி நகர் போன்ற பகுதிகளில் சுமார் 72 குடும்பங்களுக்கு பீட்சா டெலிவரி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. டெலிவரி நபருக்கு ஏற்பட்ட தொற்றால் அந்த குடும்பங்களை தனிமைப்படுத்தப்பட்டன.
மேலும் டெலிவரி செய்யும் நபர்கள் அனைவரும் முககவசங்களைப் பயன்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும் தெரிவித்துள்ளதால், மக்கள் பீதி அடையத் தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். ஆனால் அனைத்து தொடர்பு நபர்களையும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பும் முடிவு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிக்கப்பட்ட பீட்சா டெலிவரி நபர் இப்போது ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே நேரத்தில் அவரது தொடர்பில் இருந்து வந்த மற்றவர்கள் தினசரி அடிப்படையில் கண்காணிக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்