சுவையான பீட்ரூட் கூட்டு செய்வது எப்படி?
பீட்ரூட்டில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் சுவையான பீட்ரூட் கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- பீட்ரூட் – 1
- வெங்காயம் – 1
- கடலைப்பருப்பு – 4 மேசைக்கரண்டி
- அரைத்த தேங்காய் விழுது – 2 மேசைக்கரண்டி
- கறிவேப்பிலை – சிறிதளவு
- மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- கடுகு – அரை தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பீட்ரூட் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும். அதில் நறுக்கி வைத்துள்ள பீட்ரூட், ஊற வைத்த கடலைப்பருப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் மசாலா தூள், மானால் தூள், தேங்காய் விழுது, உப்பு சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வைத்து வேக விட வேண்டும். பீட்ரூட் வெந்து வற்றியதும் இறக்கி விட வேண்டும். இப்பொது சுவையான பீட்ரூட் கூட்டு தயார்.