மருத்துவமனையிலிருந்து தனது தந்தையை 1 கிமீ தூரம் தோளில் சுமந்து சென்ற மகன்.!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்கையை இழந்து தவித்து வருகின்றனர்.
பலர் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மருத்துவமனை செல்வதற்கே போதிய வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொது போக்குவரத்து இல்லாத சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் அத்தியாவசிய மருத்துவ உதவிக்கு செல்வது கடினமாக இருக்கிறது.
கேரள மாநிலம் புனலூரில் வசித்து வரும் ராய் என்பவர் ஆட்டோ ஒட்டி வருகிறார். இவரது தந்தை ஜார்ஜ் (65 வயது) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகியிருந்தார். அவரை அழைத்து சேலை ராய் தனது ஆட்டோவை கொண்டு சென்றுள்ளார். ஆனால், ஊரடங்கு அமலில் இருப்பதால், ஆட்டோவை ஒரு கிமீ தூரத்திற்கு முன்பாகவே போலீசார் நிறுத்தியுள்ளதாக தெரிகிறது.
இதனால் மருத்துவமனையில் இருந்து தனது தந்தையை தனது 1 கிமீ தூரம் தோளில் சுமந்து பின்னர் தனது ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்க்கு கூட்டி சென்றுள்ளார்.