கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது.! பலி எண்ணிக்கை 400-ஐ கடந்தது.!

Default Image

நாடு முழுவதும் கொரோனா வைரசால் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் நிறைவடைய இருந்த ஊரடங்கு மே 3 ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 414 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,489 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்