இன்றைய நாள் (16.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்…. இதோ உங்களுக்கான ராசி பலன்கள்…

Default Image

மேஷம் : இன்று உங்களிடத்தில் நம்பிக்கையும் மனஉறுதியும் அதிகம் காணப்படும். உங்கள் லட்சியத்தை எளிதில் அடையும் வாய்ப்பு கிடைக்கும். இன்று முக்கியமான முடிவுகளை எடுக்கலாம்.
ரிஷபம் : இன்று வாழ்வில் சில மாற்றங்கள் உண்டாகும். அதற்கேற்ப நீங்கள் நடந்து கொள்வது அவசியம். கவனமாக பேச வேண்டும். யோகா மற்றும் தியானம் அனைத்து விதத்திலும் உங்களுக்கு நற்பயன் அளிக்கும்.
மிதுனம் :நீங்கள் இன்று ஏற்படும் சவால்களை மனஉறுதியுடன் கையாள வேண்டும். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
கடகம் : இன்று நீங்கள் பரபரப்பாக காணப்படுவீர்கள். இன்று உங்களின் திட்டமிடல் உங்களுக்கு சாதகமாக அமையும். மனஉறுதி மற்றும் மனதைரியம் மூலம் வெற்றியை அடைவீர்கள்.
சிம்மம் : இன்று உங்கள் எதிர்காலம் பற்றி அதிகம் சிந்தீப்பீர்கள். உங்கள் இலக்கை நோக்கி நீங்கள் செல்ல முயற்சி எடுப்பீர்கள். உணர்ச்சிவசத்தை கட்டுப்படுத்துங்கள்.
கன்னி : இன்று பதட்டமான சூழ்நிலை நிலவும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். உங்கள் சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் உண்டாகும்.
துலாம் : இன்று எதிர்பார்த்த நல்ல பலன்கள் கிடைக்காது. இன்று பதட்டம் அதிகமாக காணப்படும். இசை கேட்பது, புத்தகம் வாசிப்பது போன்றவற்றில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.
விருச்சிகம் : இன்று மிகவும் வெற்றிகரமான நாளாக இருக்ககூடும். உங்கள் செயல்களை எளிதாக முடித்துவிடுவீர்கள்.உங்களிடம் அதிக ஆற்றல் காணப்படும் அது உங்கள் இலக்குகளை அடைய உதவும்.
தனுசு : இன்று பதட்டமான மனநிலையோடு காணப்படுவீர்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தி கொள்வது மூலம் மன ஆறுதல் கிடைக்கும்.
மகரம் : இன்று அனைத்து செயல்களிலும் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும். உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். மனம் பதட்டத்திற்கு உள்ளாகும்.
கும்பம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. உங்கள் முன்னேற்றம் குறித்து கவலைப்படுவீர்கள். எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நல்லது. எதனையும் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் தடைகளை சமாளிப்பது சற்று கடினமாக இருக்கும்.
மீனம் : இன்று சிறந்த வளர்ச்சி இருக்கும். ஆன்மீக ஈடுபடுங்கள் நல்ல பலன் தரும். புனித யாத்திரை மேற்கொள்ள ஆர்வமாய் இருப்பீர்கள். அது உங்கள் மனதிற்கு திருப்தியை அளிக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்