தமிழகத்தில் இன்று மட்டும் 2 பேர் பலி..மேலும் 38 பேருக்கு கொரோனா – விஜயபாஸ்கர்

Default Image

தமிழகத்தில் இன்று மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 1,204 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 1,242 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளார்கள். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 47 வயது ஆண் மற்றும் தனியார் மருத்துவமனையில் 59 வயது ஆண் ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 118 பேர் குணமடைந்துள்ளார்கள் என்றும் தமிழகத்தில் இதுவரை 21,994 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் 1,242 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. பரிசோதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 17, 835 என கூறியுள்ளார். இன்று மட்டும் 2,739 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
geetha jeevan
sprouted green gram (1)
Srilanka Minister Chandrasekaran say about Tamilnadu Fisherman issue
govi. chezhian about anna university issue
eps about anna university issue
ViratKohli