அமெரிக்காவில் புதிய நடவடிக்கை.! நிவாரண காசோலையில் ட்ரம்ப்பின் பெயர்.!

Default Image

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நிவாரண நிதியை பெறுவதற்காக வழங்கப்படும் காசோலை போன்ற அனுமதி சீட்டில் தனது பெயரை அச்சிட அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கோடிக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதன்படி ஒவ்வொரு அமெரிக்கருக்கும் இந்திய மதிப்பில் சுமார் ரூ.91,000 நேரடி வரவு வைப்பாகவும், காசோலையாகவும் வழங்கப்பட உள்ளது. ஆனால் இந்த பணிகள் தாமதமாகும் என்று வாசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு அமெரிக்கருக்கும் அளிக்கப்பட உள்ள 91 ஆயிரம் ரூபாய் காசோலையில் தனது பெயரை அச்சிட்டு தர அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதே இதற்கு காரணம் என வாசிங்டன் போஸ்ட் கூறியுள்ளது. இதற்கேற்ப கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங் மாற்றி ட்ரம்ப் பெயர் அச்சிடப்பட்ட பிறகே, அமெரிக்கர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு அமெரிக்கா அதிபரின் பெயர் இவ்வித நிவாரண காசோலைகளில் அச்சிடப்படுவது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரும் தொற்றால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை ட்ரம்ப் கையாளும் விதம் பற்றி அமெரிக்க ஊடங்கள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 6,14,246 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 26,064 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்