வீடு, வீடாக நடத்தப்படும் ஆய்வு சரியில்லை – டிடிவி தினகரன் அறிக்கை.!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால், பரிசோதனை மையங்களையும், சோதனை எண்ணிக்கையையும் அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கட்டுப்பாட்டு பகுதி அல்லாத மற்ற இடங்களில் குடும்ப உறுப்பினர்களின் பெயர், வயது போன்ற ஒன்றிரண்டு கேள்விகளோடு நோய் கண்டறிதலுக்கான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இந்த கணக்கெடுப்பையே சோதனை என்றும் இதுவரை 93% பேரிடம் சோதனை செய்யப்பட்டதாகவும் சென்னை மாநகராட்சி குறிப்பிட்டிருப்பது சரியான நடைமுறை இல்லை என்றும் தமிழக அரசு இப்படி ஏனோதானோவென்று நடந்து கொள்ளாமல் நோயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர எல்லா பகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவை கண்டறிய சென்னையில் வீடு, வீடாக நடத்தப்படும் ஆய்வு சரியில்லை என்று டிடிவி தினகரன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கணக்கெடுப்பையே சோதனை என்றும், இதுவரை 93% பேரிடம் சோதனை செய்யப்பட்டதாகவும் சென்னை மாநகராட்சி குறிப்பிட்டிருப்பது சரியான நடைமுறை இல்லை. தமிழக அரசு இப்படி ஏனோதானோவென்று நடந்து கொள்ளாமல், நோயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர எல்லா பகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் pic.twitter.com/0iXioQbn2f
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 15, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025