கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 437 காவலர்களுக்கு கொரோனா சோதனை!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு கோடியே 99,97,666 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 697 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இதுவரை 21 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் நேற்றோடு அது முடிவடைந்து, தற்போது மீண்டும் இந்திய பிரதமர் மோடி 19 நாட்களுக்கு அதிகரித்து, மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், ஓய்வின்றி தன்னலம் பாராது உழைத்து வரும் காவல் ஆய்வாளர்கள் அவர்களின் உடல்நிலையை கண்டுகொள்வதே இல்லை. இதனை தொடர்ந்து தற்போது திருச்சி மாநகரில் கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு பாதுகாப்பு பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் காவல் உதவி ஆணையர்கள் நாலு பேர் ஆய்வாளர்கள் 12 பேர் உட்பட மொத்தம் 437 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் வாரம் ஒரு விடுப்பு எடுத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.