வேளாண் தொடர்புடைய பணிகளுக்கு அனுமதி-மத்திய உள்துறை அமைச்சகம்
வேளாண் தொடர்புடைய பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நேற்றுடன் நிறைவு பெறுவதாக இருந்ததது. இதற்கு இடையில் நேற்று பிரதமர் மோடி நாடு முழுவதும் கொரோனாவை தடுப்பற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவித்த்தார்.இதனால் ஊரடங்கு 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத்தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.