ஊரடங்கு நீட்டிப்பு: ஏப்ரல் 20க்கு பின் ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம்!
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம் தேதி வரை போடப்பட்ட நிலையில், தற்போது மே-3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவால், தொழிலாளர்கள் பலரும் வேலைக்கு செல்ல இயலாமல் தவித்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், சில நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அந்த நெறிமுறைகளில், ஏப்ரல் 20-ம் தேதிக்கு பின், ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.