ஊரடங்கு நீட்டிப்பு: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!
நாடு முழுவதும் கொரோனாவை தடுப்பற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்திருந்தார். இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். மேலும், ஏப்ரல் 20-க்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்கும் என்று மோடி குறிப்பிட்டிருந்தார். அதன்படி ஏப்ரல் 20 க்கு பிறகு நடைமுறைப்படுத்தும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 20க்கு பிறகு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் :
- ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி.
- ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பின் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சுவேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் செயல்பட அனுமதி.
- ஏப்ரல் 20க்கு பின் ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் மாஸ்க் கட்ட்டயம் அணிய வேண்டும்.
- ஏப்ரல் 20இல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்; ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- மே 3 ஆம் தேதி வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு தடை தொடரும்.
- கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கலாம் என மத்திய அரசு உத்தரவு.
- மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்து தடை தொடரும்.
- நாடு முழுவதும் பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம்.
- ஏப்ரல் 20ஆம் தேதி முதல் சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம்.
- முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற அனுமதி.
- ஏப்ரல் 20 முதல் மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பால் நிலையங்கள், இறைச்சிக்கடைகள் செயல்பட அனுமதி.
- விவசாயம் சார்ந்த இயந்திரங்கள் பழுது நீக்கும் நிறுவனங்களுக்கு அனுமதி.
- ஏப்.20 முதல் அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்களை திறக்கலாம்.
- ஏப்ரல் 20 முதல் கிராமப் பகுதிகள், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள ஆலைகள் சமூக இடைவெளியுடன் இயங்கலாம்.
- ராணுவ வீரர்கள் பயணிக்க மற்றும் முக்கிய பயணிகளுக்காக குறிப்பிட்ட ரயில் சேவை அனுமதி.
- கனரக வாகன பழுதுபார்ப்பு கடைகளை திறக்க அனுமதி.
- மருந்து பொருட்கள், மருந்து உபகரணங்கள் கொண்டு செல்ல மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் விமான சேவைக்கு அனுமதி.
#IndiaFightsCOVID19
MHA issues revised consolidated guidelines on the #Lockdown2 measures to be taken by Ministries/Departments of Govt of India, State/UT governments & State/UT authorities for the containment of #COVID19 in India. (1/2) pic.twitter.com/Q85DFtMAob— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) April 15, 2020