காணொளி காட்சி மூலம் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும்.! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மே மாதம் 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெறுவதாக இருந்தது. இதனை தொடருந்து, காவல்துறை நேரடியாக கூட்டம் நடத்த தடை விதித்தனர். அதற்கு பதிலாககாணொளி காட்சி மூலம் நடத்த அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து சற்று நேரத்திற்கு முன் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டம் காணொளி மூலம் நாளை நடைபெறுமென அறிவித்தார்.
“திமுக தலைமையிலான அனைத்து கட்சிக் கூட்டம் 16.4.2020 அன்று காணொலிக் காட்சி மூலம் நடைபெறும்”
– கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவிப்பு.
Link: https://t.co/kT8jHzyyKw#DMK #MKStalin pic.twitter.com/5FyazZF7UQ— DMK (@arivalayam) April 14, 2020